கரவெட்டியில் மகுடம் சூடியது முதலைக்குடா "விநாயகர்" விளையாட்டுக் கழகம்.




(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி ஆதவன் விளையாட்டுக் கழகம் தனது 40வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கரவெட்டி  கிராம மக்களின் அனுசரணையுடன் மாபெரும்  உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 26ம் ,27ம் திகதிகளில் நடாத்தி இருந்தார்கள்  இந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இரவு, பகல் போட்டியாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண மூன்று மாவட்டத்தில் இருந்தும் அணிகள் வருகை தந்திருந்தனர்.
இந்த அணிகளில் இருந்து இறுதிப் போட்டிக்கு மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் சிறந்த அணிகளான முதலைக்குடா விநாயகர் அணியும் கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும் தெரிவாகியது.

இந்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு ஆதவன் விளையாட்டுக் கழக தலைவர் பா.காங்கேஸ்ராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்த இறுதி நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும்,  சிறப்பு அதிதியாக மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா அவர்களும், கௌரவ அதிதிகளாக மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் அ.முத்துலிங்கம் ,
மட்டக்களப்பு மானகர சபை உறுப்பினர் திலிப்குமார்,
நாவற்காடு நாமகள் வித்தியாலய அதிபர் த.கோபாலப்பிள்ளை ஆகியோரும்.
அழைப்பு அதிதிகளாக கரவெட்டி சமுகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்.
ஆகிய அதிதிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் எதிர்த்தாடியிருந்த இரு கழகங்களும் எந்த கோள்களும் போடாததால் போட்டியின் வெற்றிவை தீர்மானிர்ப்பதற்காக தண்டனை உதை இடம்பெற்றது இதில் முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டிற்கான மகுடத்தினை சூடிக்கொன்டது.
இந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் 2ஆம் இடத்தினை கொக்கட்டிச்சோலை "ஈஸ்வரா" விளையாட்டுக் கழகமும்,
3ஆம் இடத்தினை காஞ்சிரங்குடா "ஜெகன்" விளையாட்டுக் கழகமும் ,
4ஆம் இடத்தினை கரவெட்டி "ஆதவன்" விளையாட்டுக் கழகமும் பெற்றுக்கொன்டது.
இறுதிப் போட்டியின் சிறந்த வீரர், சிறந்த பந்துக் காப்பாளராக கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா வீரர்களும்.
தொடரின் சிறந்த வீரராக முதலைக்குடா விநாயகர் விரர் ரதன் அவர்களும், சிறந்த பின்கள வீரராக முதலைக்குடா விநாயகர் வீரர் வொபி அவர்களும் தொரிவு செய்யப்பட்டனர்.

வெற்றிபெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணம் மற்றும் பணப்பரிசும் முதலாம், இரண்டாம் இடங்களை பெற்ற கழகங்களுக்கு பதங்கம் ஆகியன வழங்கி வைக்கப்பட்டது.
அத்தோடு முதலாம் இடந்தினை பெற்ற முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கு சவால் கிண்ணமும் வழங்கப்பட்டுது குறிப்பிடத்தக்கது.