போரதீவு பற்று மற்றும் , மண்முனை தென்மேற்கு பிரதேசங்களுக்கான நான்கு வருட அபிவிருத்தி திட்டங்கள்


(லியோன்)

மக்கள் பங்கேற்புடன் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் இணைந்து மக்களின் வாழ்க்கை தரத்தினை நான்கு வருட காலத்தில் மேம்படுத்தல் பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுடனான ஆராயும் கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட ஜனதாக்சன நிறுவனம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பங்கேற்புடன் பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் இணைந்து வறுமை கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தல் ஊடாக  பிரதேச அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று பிரதேச செயலகம் மற்றும் , மண்முனை தென்மேற்கு  பிரதேச செயலகங்களுடன் உள்ளூராட்சி மன்ற சபைகள் இணைந்து  மட்டக்களப்பு மாவட்ட ஜனதாக்சன நிறுவன நிதி உதவியின் கீழ்  “ பிரஜைகளின் ஈடுபாட்டுடன் கொள்கை மற்றும் செயற்பாடுகளை வலுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் “  2017   தொடக்கம் 2020  ஆண்டு வரையில் மக்களின்  பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ள  பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக அரச திணைக்கள அதிகாரிகளுக்கு  தெளிவூட்டும் ஆராயும் கலந்துரையாடல் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான்  சர்வோதயத்தில் நடைபெற்றது

ஜனதாக்சன நிறுவனத்தின் அனுசரணையுடன் நிறுவனத்தின் பிரதம பணிப்பாளர்ம  டி .  எம் . சரத்  அபே குணவர்த்தன தலைமையில் நடைபெற்ற  செயல்திட்டங்கள் தொடர்பான ஆராயும் கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்குமாகாண திட்டமிடல் பிரதம பிரதி செயலாளர் என் .தமிழ்ச்செல்வன் ,கிழக்குமாகான  முதலமைச்சின்  செயலாளர் யு எல் . எ .அசிஸ் ,கிழக்குமாகான உள்ளூரட்சி மன்ற ஆணையாளர் எம் வை . சலீம் ,கிழக்குமாகான சுகாதார பணிப்பாளர் கே .முருகானந்தம் மற்றும் , உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் ,ஜனதாக்சன நிறுவன திட்டமிடல் உத்தியோகத்தர்கள் ,மாவட்ட செயலகம் , பிரதேச செயலகங்கள்  , பிரதேச சபைகள் , வைத்தியசாலைகள் ஆகியவற்றின் , உயர் அதிகாரிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்