முதல் முறையாக மண்முனை மேற்கு பிரதேசத்தில் வீதி விழக்குகள் பொருத்தப்படுகிறது.(விளாவூர் நிருபர்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச சபையினரால் முதல் முறையாக வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.
இந்த வீதி விளக்குகள் முதல் கட்டமாக யானைகளின் அட்டகாசம் அதிகமாக இருக்கும் பனையறுப்பான், சில்லிக்கொடியாறு கிராமங்களில் பொருத்தப்பட்டன.
இந்த வீதி விளக்குகளை மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா,
பிரதேச சபையின் செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை, 8ம் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ச.மோகன் ஆகியோர் ஒளிரவைத்தனர்.