பிரதி பொலிஸ்மா அதிபருக்கான பியாவிடை நிகழ்வு


(லியோன்)

ஒய்வு பெற்று செல்லும்
 மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கான பியாவிடை  நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது .


பொலிஸ் திணைக்களத்தில்  கடந்த 35 வருடங்கள் கடமையாற்றி  மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வருடங்கள்  மாவட்ட பிரதி  பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்று செல்லும் பிரதி  பொலிஸ்மா அதிபர்  W J .  ஜாகொட ஆராய்ச்சியின் சேவை நலனுக்காக  கௌரவிக்கப்பட்டு , ஒய்வு நிலைக்கான  பிரியாவிடை  நிகழ்வு  மட்டக்களப்பு  வெபர் மைதானத்தில் நடைபெற்றது .  


மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தயா தீகா வதுற  ஒழுங்கமைப்பில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எச் எஸ் கபில ஜயசேகர தலைமையில் நடைபெற்ற ஒய்வு நிலைக்கான  பிரியாவிடை நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் கலந்துகொண்டார் .

ஆரம்ப நிகழ்வாக  பொலிஸ்மா அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு  அதிகாரிகளினால் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர் . இதனை தொடர்ந்து பொலிஸ்மா அதிபருக்கு கெளரவம் அளிக்கு வகையில்  அணிவகுப்பு மரியாதைகளுடன் அதிதிகளின் விசேட  வாழ்த்துரைகளும் இடம்பெற்றது 

கடந்த  35 வருடங்கள் பொலிஸ்  திணைக்களத்தில் சேவையாற்றி பல்வேறு உயர்நிலை பதவிகளை  பெற்று ,சேவைக்கான பல விருதுகளை பெற்று ஒய்வு பெற்று செல்லும் பொலிஸ்மா அதிபரின் சேவை நலனை பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில்  திருகோணமலை ,அம்பாறை ,மட்டக்களப்பு  ஆகிய மாவட்டங்களில்  பொலிஸ்  உயர்நிலை பொலிஸ் அதிகாரிகள் , இராணுவ கட்டளை அதிகாரிகள் ,விமானப்படை அதிகாரிகள் ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , சிவில அமைப்புக்களின் பிரதிநிதிகள் , வர்த்தக சங்க உறுப்பினர்கள் ,பொலிஸ்மா அதிபரின் குடும்ப உறவினர்கள் என பலர்  கலந்துகொண்டனர்