'சூழலைபேணி இடர்தணிப்போம்'பிரதேசசெயலமர்வு- வெல்லாவெளி.

செந்நெல்லும்  பாலும் தேனும்,தீந்தமிழ் சுவையும் கலையும்,வாவிமகள் போல் வற்றாதுஓடும் மீன்பாடும் தேநாடு,வளநாடுஎன்றுபோற்றுகின்றோம் எம் தென்தமிழீழவளநாட்டை, மகிழ்ச்சிதான். இருந்தும் வயலைநம்பியேவாழ்க்கைஎன்றமக்களின் வயிற்றிலடிக்கிறது இயற்கை,வெள்ளமாக,வறட்சியாக இன்னும் பலப்பலவடிவங்களில். காரணம், இயற்கைக்குமனிதர்கள் செய்யும் இடர்தான் வேறில்லை. இந்த இடர் வரக்காரணங்கள் என்ன? இதனால் என்னதீயவிளைவுகளைஎல்லாம் நாம் எதிர்கொள்ளுகின்றோம்? அவற்றைஎவ்வாறுவெற்றிகொள்ளலாம்? ஏன்பனபற்றிஎல்லாம் வெல்லாவெளிகலாசாரமண்டபத்தினில் சங்கமித்தவிவசாயிகள்,கிராம அபிவிருத்திசங்கங்களின் தலைவர்கள்,அனர்த்தமுன்னாயத்த குழுக்களின் உறுப்பினர்கள்,அபிவிருத்திமற்றும் கிராஉத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவிழிப்பூட்டும் செயலமர்வினை 13.06.2018 அன்றுபிரதேசசெயலகததுடன் இணைந்துசக்திஉதவும்கரங்கள் அமைப்பினராம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.



இதில் பிரதேசசெயலாளர் செயளாளர் செல்வி இ.ராகுலநாயகி,சமூகவியல் மற்றும் சூழலியல் தொடர்பானஆய்வாளரும் வளவாரரும் ஆகியதிரு.எஸ்.ரமேஸ்வரன்,உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன்,கொள்கைகள் மற்றும் பொருளாதாரவிவகாரங்கள் அமைச்சி;ஆகியோருடன் சக்திஉதவும்கரங்கள் அமைப்பின் பலஉறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்..
'காலநிலைமாறிப்போச்சுஎன்கிறானுங்கோஅதுக்குகாரணமேநம்மதானேஅறியவில்லையா? மார்கழியில் மழையடிக்கும் அந்தக்காலங்கோ இப்போதுமாறிப்போச்சுகாலநிலை இந்தக்காலங்கோ. ஏனத் துவங்கியசி.தணிகசீலன் அவர்கள்,மேலும் கூறுகையில்,முறைகேடானஅபிவிருத்தி,சட்டரீதியற்றவளச்சுரண்டல்,அரசியல் அராஜகம் மற்றும் சூழல் பற்றியதெழிவின்மைஆகியனசோலையானஎம்பிரதேசங்களைபாலையாகமாற்றிவிடும்.
சூழல் கெடுதலுக்கும் அதுசிறப்பதற்கும் மனிதனேகாரணம். ஏல்லாவகையானஅனர்த்தங்களிலும் பட்டுத்தேறியவர்கள் நாம்,அதனால் அனர்த்தங்களின் மூலம் உண்டாகும் இடர்கள் பற்றிநன்கறிவோம். ஆகவேஎதிர்காலத்தில் அனர்த்தங்களைதணிப்பதற்கு இயற்கையைமதித்துஎமது சூழலைபாதுகாக்கவேண்டும். இயற்கைஎன்பதுஐம்பூதங்களினால் ஆனதுஆனால் அதுஎமதுமுறைகேடானசெயற்பாட்டினால் நிலம்,நீர்,காற்று,ஆகாயம் என்பனமாசுபட்டுமனிதனையேஆரோக்கியம் இல்லாதஒருவனாகமாற்றிவிடுகின்றது'என்றார்
அவர் மேலும் கூறுகையில் 'சுமார் 23 மில்லியன் சனத் தொகையுடனானதீவுநாடான இலங்கையில் சீரற்றநிலப் பயன்பாட்டுமுறைகள் மற்றும் காலநிலைமாற்றத்தின் தாக்கம் உட்படபல்வேறு இயற்கைஅனர்த்தங்களின் தாக்கத்துக்குஉட்படும் சாத்தியப்பாடுஉள்ளதுடன் அதுபல்வேறுசிரமங்களுடன் அடைந்தஅபிவிருத்தியைஅபாயத்துக்குஉட்படுத்திநாட்டின் பொருளாதாரவளர்ச்சிமற்றும் வறுமைஒழிப்புமுயற்சிகளுக்குஅச்சுறுத்தலாகவும் அமையலாம்.'என்றுதெரிவித்தார்.
'இன்றுமண் அகழ்தல்,மரங்களை இல்லாதொழித்தல் காரணமாகவளமானமண்ணைநாங்கள் இழந்துகொண்டிருக்கின்றோம் அதுபோல் முறையற்றதிட்டமிடல்கள் மூலமாகஅனர்த்த இடரின் அதிகரித்ததன்மையினைபரவலாக்கிக்கொண்டிருக்கின்றோம்,அவற்றில் இருந்துவிடுபடநாங்கள் விழிப்படையவேண்டும் அத்துடன் இன்றுநிலக்கீழ் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துகொண்டுபோகின்றதுகாரணம் பயிர்ச்செய்கைஎன்றபேரில் அந்தநீர் உறிஞ்சப்பட்டுக்கொண்டிருப்பதுடன் அந்த இடைவெளியினைநிரப்ப கடல் நீர் உட்புகுந்துகுடிநீரையும் உப்பாக்கும் சாத்தியத்தினைநாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம் எனவும்,காப்புமுறையியல் மற்றும் செயற் திட்டங்கள் ஊடாக இயற்கைஅனர்த்தங்கள் மூலம் ஏற்படும் அபாயங்களின் பாதிப்பைக் குறைப்பதைஅனர்த்த இடர் குறைப்பு  இலக்காகக் கொண்டுள்ளது. அரசகொள்கைகளாக,நாம் எவ்வாறுஎமதுஉணவுப் பயிர்களைபயிரிடுகின்றோம்?எங்குஎவ்வாறுநாம் எமதுவீடுகள்,நகரங்கள். மாநகரங்களைநிர்மாணிக்கின்றோம?. ஏன்கின்றஒவ்வொன்றுக்கும் எடுக்கும் பிழையானதீர்மானம் எம்மைஅனர்த்தத்துக்குவழிவகுக்கின்றது. சார்பானதீர்மானங்கள் பாதுகாக்கின்றது. எனவேஅனர்த்த இடர் குறைப்புஎன்பதுமுழுமையாகவேதெரிவுகள் பற்றியதாகும்.'ஏனஎஸ்.இரமேஸவரன் எடுத்துக்கூறினார்.
பிரதேசசெயலர் குறிப்பிடுகையில் 'இதுபோன்றவிழிப்பூட்டும் நிகழ்வுகள் பிரதேச,கிராமமற்றும் பாடசாலைமட்டங்களில் கொண்டுசெல்லப்படவேண்டும் எனவும் இதற்குஅனைவரும் உதவமுன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.'