கல்லடித்தெரு –பாஞ்சாலிபுரம் திரௌபதையம்மன் ஆலய கும்பாபிஷேகம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள


 (லியோன்)

மட்டக்களப்பு – கல்லடித்தெரு –பாஞ்சாலிபுரம்  அருள்மிகு  ஸ்ரீ  திரௌபதையம்மன் ஆலய புனராவர்த்தன பெருஞ்சாந்திப்  பெருவிழா விஞ்ஞாபன நிகழ்வுகள்
22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர் வரும் 25ஆம் திகதி திங்கள்கிழமை நடைபெறவுள்ள  கும்பாபிஷேக  விஞ்ஞாபன நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது


கிழக்கிலங்கையின் மட்டு- நகரில் சிறப்பு மிக்க மட்டக்களப்பு  புளியந்தீவு – கல்லடித்தெரு –பாஞ்சாலிபுரம்  அருள்மிகு  ஸ்ரீ  திரௌபதையம்மன் ஆலய புனராவர்த்தன குண்ட அஷ்டபந்தன  பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா விஞ்ஞாபன  நிகழ்வை முன்னிட்டு  23  ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய  இரண்டு நாட்கள்  எண்ணெய் மற்றும் பால்க் காப்பு  சாத்தும்  நிகழ்வுகள் நடைபெற்று 25ஆம் திகதி திங்கள்கிழமை நடைபெறவுள்ள கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா விஞ்ஞாபன நிகழ்வுடன் நிறைவு பெறவுள்ளது  

23  ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய  இரண்டு நாட்கள்  அதிகாலை தொடக்கம்  மாலை வரை  ஆலய பிரதம குரு  பிரம்மஸ்ரீ சரவணபானந்த சர்மா தலைமையில்  பூர்வாங்க கிரிகைகள் இடம்பெற்று  தொடர்ந்து  விசேட யாக பூசைகள் ,ஹோம பூசைகள் இடம்பெற்று விக்கிரகங்களுக்கு  எண்ணெய் மற்றும் பால்க்காப்பு சாத்தும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன

ஆலய பரிவார விக்கிரங்களின் பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வுகள்  25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை சுபவேளையில்  சுத்தி புண்ணிய யாகம் ,யாக பூசை பூரணாகுதி விசேட தீபாராதனை மற்றும்  கும்ப உத்தாபனம் ஸ்தூபி அபிஷேகம்  இடம்பெற்று  பரிவார விக்கிரகங்களுக்கு பிரதிஸ்டா மகா கும்பாபிஷேக விஞ்ஞாபன  நிகழ்வுகள் பிரதிஷ்ட பிரதம குரு ஈசான சிவாச்சாரியார்  சிவஸ்ரீ இரா .கு . அருளானந்தக் குருக்கள்  தலைமையில்  நடைபெறவுள்ளது  




.