மாவட்ட சர்வமத பேரவையின் மாதாந்த செயற்குழு கூட்டம்


 (லியோன்)

இலங்கை சமாதான பேரவையினால்  ஒழுங்கமைக்கப்பட்ட  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான
   சர்வமத பேரவையின் 8 வது மாதாந்த கூட்டத்தினல்   தகவல் அறியும் உரிமைச்சட்டம்  ஏன் – முக்கியம் – பிரஜைகள் எவ்வாறு இதனை அணுகலாம் என்பது தொடர்பான தகவல் அறியும் உரிமை   அடிப்படை அம்சங்கள் தொடர்பான  விடயங்களை கொண்ட செயலமர்வு  செயற்குழு கூட்டமாக  நடைபெற்றது


இதன்போது ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட  தரங்கள் , மதங்கள் ,வர்க்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டு மக்கள் வெவேறு பிரிவினராக பிரிந்து வாழ்கின்ற நிலையில் தங்களுக்குரிய சம்பிரதாயங்களை பின்பற்றவும் , அவர்களது கலாசார முறைக்கேற்ப செயல்படுத்துவதற்கான வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும் ,சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்படுகின்ற நிலைகளை  பெற்றுக்கொள்வது  தொடர்பான விடயங்கள்  நடைபெற்ற செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது .

தேசிய சமாதான பேரவையின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி கிரீன் காடன் விடுதியில் நடைபெற்ற 8 வது  மாதாந்த செயற்குழு  செயலமர்வில் தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் சமன் பெரேரா, வளவாளராக சிரேஷ்ட சுதந்திர ஊடகவியாளர் ஆனந்த ஜயசேகர  மற்றும்  மாவட்ட சர்வமத பேரவையின் பல் சமய தலைவர்கள் , பேரவையின் சிவில்  பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்