மங்கிகட்டு "கதிரவன்" விளையாட்டுக் கழகம் நாடாத்தும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி.
(விளாவூர் நிருபர்)

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட மங்கிகட்டு "கதிரவன்" விளையாட்டுக் கழகமானது தனது 43 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்த தீர்மானித்து இருக்கின்றார்கள்.

இப் போட்டியானது பகல்,இரவு கொண்டதாக எதிர்வரும் 02.06.2018 ஆம் திகதி சனிக்கிழமை கதிரவன் விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.
எனவே தங்கள் கழகமும் வருகை தந்து இப் போட்டியினை சிறப்பிக்குமாறு அழைத்து நிற்கின்றார்கள்.

போட்டி நிபந்தனைகள்

√√ அணிக்கு நான்கு பேர் கொண்ட போட்டியாக அமையும்.
√√ ஒரு அணியில் விளையாடிய வீரர் மற்றைய அணியில் விளையாட முடியாது.
√√ நடுவரின் தீர்ப்பே இறுதியானதாக அமையும்.
√√ போட்டி நுழைவு கட்டணமாக 600 ரூபா அறவிடப்படும்.
√√ கழகங்கள் அனைத்தும் பி.ப.3:00 மணிக்கு முன்பதாக வருகை தந்து வரவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெற்றிபெறும் அணிகளுக்கு வெற்றிக் கிண்ணமும்,  பணப்ரிசில்களும் வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு .
077 4718539 - சனு
077 9694647 - மதி