வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்கம் மட்டக்களப்பில் ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுக்கொரு பட்டதாரிகளை உருவாக்கும் செயற்றிட்டம் ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மறுக்கப்படும் கல்வி பறிக்கப்படும் உயிருக்கு சமம் என்னும் தலைப்பில் இந்த கல்வி செயற்றிட்டம்முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையில் கற்கும் வறுமை நிலையில் உள்ள 150 மாணவர்கள் முதல் கட்டமாக உள்வாங்கப்பட்டு அவர்களின் அனைத்து கல்வித்தேவைக்கான செலவுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பேற்றுள்ளார்.

இது தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னதாக கல்வியின் அவசியத்தினையும் இந்த கல்வி செயற்பாட்டின் அவசியம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் பட்டிப்பளை பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுப்பினர்கள்,தவிசாளர்கள்,பிரதி தவிசாளர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் முடியும் வரையில் தொடர்ச்சியான உதவிகளை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.