நாவக்குடா சின்ன லூர்த்து அன்னை ஆலய வருடாந்த திருவிழா


   (லியோன்)

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின்  மட்டக்களப்பு நாவக்குடா புனித சின்ன லூர்த்து  அன்னை அன்னை ஆலய  வருடாந்த  திருவிழா  திருப்பலி  திருகோணமலை மறை மாவட்ட குருமுதல்வர் கிங்ஸ்லி ரொபட் அடிகளார் தலைமையில்  (20) ஞாயிற்றுக்கிழமை  ஒப்புகொடுக்கப்பட்டது


ஆலய வருடாந்த  திருவிழா கடந்த  வெள்ளிக்கிழமை மாலை பங்கு தந்தை   மெருஷன் ஹென்றி  தலைமையில் கொடியேற்றபட்டு திருவிழா  ஆரம்பமானது. தொடர்ந்து நவநாட்காலங்களில் தினமும் மாலை திருசெபமாலை அருளுரைகளுடன் திருப்பலியும்  இடம்பெற்றது.

 (19) மாலை அன்னையின் திருச்சுருப பவனி இடம்பெற்று ,ஆலயத்தில் விசேட  திவ்வியநற்கருணை வழிபாடுகளும், மறைவுரைகளும். விசேட திருப்பலி இடம்பெற்றது

(20) ஞாயிற்றுக்கிழமை  காலை 07.00 மணிக்கு  இடம்பெற்ற திருவிழா திருப்பலியை திருகோணமலை மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிங்ஸ்லி ரொபட் அடிகளார் ஒப்புகொடுத்தார் .

திருப்பலியின் பின்  ஆலய கொடியிறக்கப்பட்டு   வருடாந்த ஆலய திருவிழா இனிதாக நிறைவு பெற்றது .

இந்த திருவிழா திருப்பலியில்  திருகோணமலை மறை மாவட்ட குருமுதல்வர் கிங்ஸ்லி ரொபட் அடிகளார் பங்கு மக்களால் கௌரவிக்கப்பட்டதுடன் இந்த திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதியில் இருந்து பெருமளவான இப்பகுதி மக்கள் கலந்து சிறப்பித்தனர் .