சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்க ஒரு இலட்சம் கை விரல் அடையாளம்


   .(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுத்து நிறுத்தம் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக வவுணதீவு பிரதேச அபிவிருத்தி நிறுவனமும் ,மாவட்ட இளைஞர் சமூகம் இணைந்து மாவட்ட ரீதியில் ஒரு இலட்சம்  கை விரல் அடையாளம் பெரும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்


இதேவேளை நாடளாவிய ரீதியிலும்  அனைத்து மாவட்ட இளைஞர்கள் இணைத்துக்கொண்டு  பல இலட்சம்  கை விரல் அடையாளத்தினை பெற்று  சிறுவர் துஸ்பிரயோகத்தை தடு நிறுத்தம் வகையில் கை விரல் அடையாளம் இடப்பட்ட  ஆணவங்களை நேரடியாக ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டவுள்ளன

இதன் ஆரம்ப நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வினை தொடர்ந்து பொதுமக்களிடம் கை விரல் அடையாளம்  பெரும் நடவடிக்கையினை ஆரம்பித்து  வைக்கப்பட்டது  

இந்நிகழ்வினை மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தனது  கை விரல் அடையாளத்தினை இட்டு  நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .
இதன் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , மாவட்ட இளைஞர்கள் வவுணதீவு பிரதேச அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்