தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய உற்சவத்தின் கல்யாணக் கால் வெட்டும் வைபவம்


(லியோன்)

மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின்   5தாம் நாள் சடங்கு  கல்யாணக் கால் வெட்டும் வைபவம் (22)  நடைபெற்றது
..

கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார  உற்சவம் கடந்த 18 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை மாலை  திருக்கதவு  திறத்தல்    வைபவத்துடன்  ஆரம்பமாகி  5ஆம்  நாள் உற்சவத்தின்  கல்யாணக் கால் வெட்டும் சடங்கு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூபக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது .

ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள்  இடம்பெற்று ஆலய உற்சவத்தின்     கல்யாணக் கால் வெட்டும்  வைபவம் அடியார்கள் புடைசூழ மேளதாளம் முழங்க பக்திபூர்வமாக இடம்பெற்றது    .

இதனை தொடர்ந்து  வழமையான வீதியூடாக ஊர்வலமாக  சென்று அம்பாள் ஊர் காவல் பண்ணும் நிகழ்வு இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பெருமளாவான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர் ஆலய உத்சவத்தின்  10ஆம் நாள்  சடங்கு  27.05.2018 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   அதிகாலை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று 29.05.2018 ஆம் திகதி  செவ்வாய்கிழமை    அதிகாலை திருக்குளிர்த்தி பாடி  ஆலய உற்சவம் இனிதே நிறைவு பெரும் .