வேலையற்ற பட்டதாரிகள் கல்வியமைச்சரிடம் மகஜர் கையளிப்பு.
(மண்டூர் நிருபர்) கிழக்குமாகாணசபையின் பட்டதாரி ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியெய்தியும் நியமனம் வழங்கப்படாது நிலுவையில் உள்ள பட்டதாரிகளை நியமனத்துள் உள்வாங்கும்படி கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மகஜர் ஒன்றினை இன்று (19.05.2018) கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களிடம் கையளித்தனர். மட்/சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு அமைச்சர் வருகைதந்தபோதே இவ் மகஜர் கையளிக்கப்பட்டது.

கடந்தவருடம் இடம்பெற்ற ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியெய்தும் நியமனம் வழங்கப்படாது உள்ள பட்டதாரிகளை உள்வாங்கும்படி ஜனாதிபதி கிழக்குமாகாண ஆளுனரிற்கு பணித்துள்ள நிலையில் கிழக்குமாகாணசபை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தினை இழுத்தடிப்பு செய்வதனை மேற்கோள்காட்டியே கல்வி அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.