மட்டக்களப்பு கல்வி வலயமட்ட விளையாட்டு விழா



  
 (லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட
  படசாலைக்கிடையிலான  2018 ஆம் ஆண்டுக்கான  வலயமட்ட விளையாட்டு விழா நிகழ்வுகள்  இன்று பிற்பகல்   மட்டக்களப்பு வெபர்  மைதானத்தில்  வலயக்கல்விப்  பணிப்பாளர் கே  பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது


 நடைபெற்ற  2018 ஆம் ஆண்டுக்கான  வலயமட்ட விளையாட்டு விழா நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் அழைத்து வரப்பட்டன .அதனை தொடர்ந்து மைதானத்தில் இடம்பெற்ற  மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளுடன் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஓட்டப்போட்டிகள் , கராட்டி ,கூடைப்பந்து , வலைப்பந்து , நீச்சல்  போன்ற போட்டிகள் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச் இ எம் டப்ளியு ஜி  டி திசாநாயக , சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் , மற்றும் நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் , ஆசிரியர் ஆலோசகர்கள் ,அருட்தந்தையர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் மாணவர்கள் ,பெற்றோர்கள்என பலர் கலந்துகொண்டனர்  கலந்துகொண்டனர் 
நடைபெற்ற  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகிடையிலான   2018 ஆம் ஆண்டுக்கான  வலயமட்ட விளையாட்டு  போட்டிகளில் பங்குபற்றிய 37 பாடசாலைகளில் பெற்றுக்கொண்ட புள்ளிகள் அடிப்படையில்  வலயமட்டத்தில் பங்குபற்றிய பெண்கள் பாடசாலைகளில்    கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயம் முதல் இடத்தினையும் , மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்தினையும் , மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது .

இதேவேளை வலயமட்டத்தில் பங்குபற்றிய  ஆண்கள் பாடசாலைகளில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி முதல் இடத்தினையும் , கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தினையும் , மட்டக்களப்பு மத்திய கல்லூரி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது

நடைபெற்ற விளையாட்டு விழா நிகழ்வில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த பாடசாலை மாணவர்களுக்கும் , அவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும்  மற்றும் போட்டிகளை பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் , பாடசாலைகளுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால்  பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்