(விளாவூர் நிருபர்)
மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் -2018
ஆரம்பம் : 31.05.2018
நிறைவு : 03.06.2018
ஈழமணித் திருநாட்டின் செவ்வானம் மலரும் கிழக்கெனும் பரந்த தேசத்தில் மட்டுமாநகரின் மேற்கே எட்டுத்திசை புகழ் படுவான்கரையெனும் எழில் நிறைந்த நன்னகர் பதியில் தென்னை பனையோடு தேன் தரு சோலையும் நாற்று வயல்களும் நாற்திசை சூழ்ந்திட நல்மணி செந்நெல் வயல்களும் செழித்துப் பொலிவுற சீத்தன் வாவியில் மீனினங்கள் இசைபாட, மயில்கள் நடனமாடிடும் தமிழ்ப்பதியாம் விளாவட்டவானில் வீற்றிருந்து அருள் கொடுக்கின்றாள் அன்னை ஸ்ரீ பேச்சி அம்பாள்.
உற்சவ கால நிகழ்வுகள்
√ 31.05.2018
வியாழக்கிழமை இரவு திருக்கதவு திறத்தல், மற்றும் விளாவட்டவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பட்டெடுப்பு நிகழ்வு இடம்பெறும்.
√ 01.06.2018
வெள்ளிக்கிழமை பகல் விசேட பூஜை மற்றும் இரவு நவகும்பம் வைத்தல் பூஜையும் நடைபெறும்.
√ 02.06.2018
சனிக்கிழமை பகல் நெற்குத்துதல் சடங்கு, விசேட பூஜைகளுடன் , இரவுப் பூஜையும் நடைபெறும்.
√ 03.06.2018
ஞாயிற்றுக்கிழமை காலை விநாயகர் பானை எழந்தருளப் பண்ணல் பூஜை நடைபெறும்.
மாலை கன்னிமார் பூஜை, ஆகாய பேச்சியம்மனுக்கு மடைப் பள்ளயம் கொடுத்தல் பூஜை, கடல் குளிப்பு, வாழி பாடலுடன் உற்சவகால பூஜைகள் யாவும் இனிதே நிறைவுபெற இருக்கின்றது.
இரவு நேர கலை நிகழ்ச்சிகள்.
√√ 01.06.2018( வெள்ளிக்கிழமை)
இரவு விளாவட்டவான் கூத்துக்
கலைஞர்களால் " பப்பிரவாகு "
வடமோடி கூத்து இடம்பெறும்.
√√ 02.06.2018 (சனிக்கிழமை)
இரவு மேடைக் கலை
நிகழ்வுகள் இடம்பெறும்.