மண்முனைப்பற்று பிரதேசசபையின் முதலாவது அமர்வு

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேசசபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம் தலைமையில் இந்த கன்னி அமர்வு நடைபெற்றது.

இந்த அமர்வில் பிரதி தவிசாளர் மா.சுந்தரலிங்கம் உட்பட மண்முனைப்பற்று பிரதேசசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்றைய அமர்வில் பங்குபற்றினர்.

இதன்போது மண்முனைப்பற்றின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் தவிசாளர் சோ.மகேந்திரலிங்கம், பிரதி தவிசாளர் மா.சுந்தரலிங்கம் மற்றும் உறுப்பினர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

முக்கியமாக மண்முனைப்பற்றில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் இதன்போது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் செயற்பாடுகளில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தல்,வீதிகளில் மின் விளக்குகளை பொருத்துதல்,கிரவல் வீதிகளை செப்பணிடல் மற்றும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்கு பங்களிப்புகளை வழங்குதல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.