மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தேருக்கு கலசம்பூட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பேராலயத்தில் அமைக்கப்பட்டுவரும் கிழக்கு மாகாணத்தின் மிகவும் உயரமான சித்திரத்தேருக்கான கலசபீடம் பூட்டும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் பேராலய வளாகத்தில் 39 அடி உயிரத்தில் இந்த சித்திரத்தேர் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் மிகவும் உயிரமான தேரினைக்கொண்ட ஆலயமாக திகழும் வகையில் இந்த சித்திரத்தேர் அமைக்கப்பட்டுவருகின்றது.
இதன் கலசபீடம் பூட்டும் நிகழ்வில் ஆலய வண்ணக்கர்மார்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அடியார்களின் பங்களிப்புடனும் தனவந்தர்களின் பங்களிப்புடனும் அமைக்கப்பட்டுவரும் இந்த தேர் நிர்மாணப்பணிக்கு உதவ விரும்புவோர் ஆலய பரிபாலனசபையுடன் தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கக்படட்டுள்ளது.