அரசடிசந்தி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீடு

மட்டக்களப்பு அரசடிச்சந்தி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் கும்பாபிஷேகத்தின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையிலான கும்பாபிஷேக சிறப்பு மலர் வெளியீடு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் அரசடிச்சந்தி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் தலைவர் கி.சண்முகலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ஏந்திரி த.பத்மராஜா,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் மற்றும் கௌரவ அதிதிகளாக சிவஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார்,சிவஸ்ரீ த.சிவகுமாரன் குருக்கள், அரசடிச்சந்தி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ எஸ்.குகானந்தசர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளினால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.

இந்த கும்பாபிஷேக சிறப்பு மலர் அறிமுகவுரையினை ஓய்வுநிலை அதிபர் எம்.இராசரத்தினம் மேற்கொண்டதுடன் நூலாசிரியர் ச.தர்மராஜன் ஏற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும் ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.