வாழ்வோசை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு வாழ்வோசை விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது


போட்டி பிளஸ் அமைப்பானது வடக்கு கிழக்கும் மாகாணங்களில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக வரிய பாடசாலை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது .

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக மட்டக்களப்பு வாழ்வோசை விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க செயலாளர் ஜெகன் ஜீவராஜ் தலைமையில் கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் நடைபெற்றது .

பாதணிகள் வழங்கும் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் விசேட கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பாதணிகளும் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் போட்டி பிளஸ் அமைப்பின் பிரதிநிதிகளான மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ,, திருமதி சசி மகேந்திரன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சீப்ரா , வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் செல்வி .ரட்ஷாயினி,  மற்றும் கிறிஸ்தவ வாலிப சங்க செயலாளர் ஜெகன் ஜீவராஜ், புனித மிக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா , வாழ்வோசை பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்