முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி தொடர்பான முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி


(லியோன்)



மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஊடாக உலக வங்கி செயல்படுத்தப்படும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படும் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான 7  நாள் பயிற்சி நெறியானது  28.04.2018  தொடக்கம் 04.05.2018 வரை மட்டக்களப்பில்  நடைபெறுகின்றது


சிறந்த சிறார்களை உருவாக்கும் முன்பள்ளி ஆசிரியர்களின் அறிவையும் ,திறன்களையும் , விருத்தி செய்யுமுகமாக முன்பள்ளி பிள்ளைகளின் முழுமையான விருத்தியை ஊக்குவிப்தற்கான பயிற்சியாக   சிறார்களின் உடல் , உள சமூகவியல் , அறிவு , மொழி மற்றும் ஆரம்ப எழுத்தறிவு போன்ற பயிற்சி அளிக்கப்படுகின்றது .,

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் வி .முரளிதரனின் ஒருங்கிணைப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது

இந்நிகழ்வில் பயிற்றுவிப்பாளர்களாக .உலக வங்கியின்  பயிற்றுவிக்கபபட்ட பயிற்சியாளர்கள் வளவாலர்களாகவும், பயிற்சி நெறியில் 50 முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்துகொண்டுள்ளனர்
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன்  மற்றும் மாவட்ட செயலக ,பிரேதேச செயலக  முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்