செட்டிபாளையம் கண்ணியம்மன் ஆலய மஹா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்கதும் மிகவும் தொன்மையானதுமான மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.

இலங்கையில் இராஜகோபுரத்தினைக்கொண்ட முதலாவது கண்ணகியம்மன்  ஆலயமாக உருவான செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் புனராவர்த்தன அஸ்டபந்தன பிரதிஸ்டா மஹா கும்பாபிசேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீஐயப்பதாச சாம்பசிவ சிவாச்சாரியார் தலைமையில் வெள்ளிக்கிழமை கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பமாகியது.

இன்று காலை விசேட யாக மற்றும் பூஜைகள் நடைபெற்று அடியார்கள் அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

நூளை ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாளின் மகா கும்பாபிசேகம் காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.