பன்சேனையில் சித்திரை விளையாட்டு விழா.

பன்சேனையில் சித்திரை விளையாட்டு விழா.

மண்முனை மேற்கு பிரதேச செயலக கலாச்சார பிரிவின்  அனுசரனையில் பன்சேனை உதய ஒலி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில்  கலாச்சார விளையாட்டு விழா  கடந்த 18.04.2018 புதன்கிழமை பன்சேனை உதய ஒலி இளைஞர் கழகத்தின் தலைவர் எஸ்.ரவிக்குமார் தலைமையில்
நடைபெற்றது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விளையாட்டு போட்டி பன்சேனை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் இளைஞர்கள் முதியவர்கள்  பலர் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கு பற்றினர்.

பலுன்ஊதி உடைத்தல், யானைக்குகண் வைத்தல், ஊசிக்கு நூல்கோர்த்தல், ஓலை இழைத்தல்,  நீர்குடித்தல், நீர்நிரப்புதல், தேசிக்காய் ஓட்டம் என பல போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்விற்கு கலாச்சார உத்தியோகஸ்தர் செல்வி அ.தனுஷியா,

பிரதேச இளைஞர் சேவை அலுவலர்,

தேசிய சம்மேளன பிரதிநிதியும் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர்கழக சம்மேளன தலைவருமான செல்வன் ரி.விமலராஷ்,

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி அ.தர்ஷிக்கா,

மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் செல்வன் ச.திவ்வியநாதன்,

மண்முனை மேற்கு பிரதேச சம்மேளன அமைப்பாளரும் ஆயித்தியமலை வடக்கு கதிர் இளைஞர் கழக தலைவருமான செல்வன் யோ.சூரியகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.