சம்பியனாக நரிப்புல்தோட்டம் ஜீவா இளைஞர் கழகம் தெரிவு.

மண்முனை மேற்கு பிரதேசத்தில் இந்த வருடத்திற்கான கரப்பந்து சம்பியனாக ஜீவா இளைர் கழகம் தெரிவு.

30 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2018,

மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு பிரதேசத்தில் பதிவுசெய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட ஆண்களுக்கான கரப்பந்து சுற்றுப்போட்டியில் நரிப்புல்தோட்டம் ஜீவா இளைஞர் கழகம் சம்பியனாக வெற்றிவாகை சூடியது.

இன்று நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிப் போட்டியில் நாவற்காடு பாரத் இளைஞர் கழகமும் நரிப்புல்தோட்டம் ஜீவா இளைஞர் கழகமும் ஒன்றை ஒன்று எதிர்த்து போட்டியிட்டன.

முதல்சுற்றில் 22க்கு 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் நாவற்காடு பாரத் இளைஞர் கழகம் முன்னிலை பெற்றது.

இரண்டாவது சுற்றில் 22கு 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் நரிப்புல்தோட்டம் ஜீவா இளைஞர் கழகம் முன்னிலை பெற ஆட்டம் சூடுபிடித்தது.

மூன்றாவது சுற்று பரபரப்புக்கு மத்தியில் எதிர்பார்ப்புமிக்க போட்டியாக அமைந்தது.

ஆரம்பமுதல் சிறப்பாக விளையாடிய ஜீவா இளைஞர்கழம் இறுதிவரை திறமையாக விளையாடி 10கு 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியை தனதாக்கி இந்த வருடத்திற்கான மண்முனை மேற்கு பிரதேசத்தின் சம்பியனாக வெற்றிவாகை சூடிக்கொண்டது.