மாமாங்கேஸ்வரர் ஆலய குளம் புனரமைப்பு பணிகளை ஆளுநர் பார்வையிட்டார்


(லியோன்)


புனரமைக்கப்படுகின்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளம் கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம (19) மாலை பார்வையிட்டார்


கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவின்  வேண்டுகோளுக்கு இணங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்த குளம் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

கிழக்குமாகாண முதலமைச்சின் செயலகத்தினால் 6  மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் ஆலய குளம் புனரமைக்கப்படுகின்றன

இந்த புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக  விஜயமொன்றை மேற்கொண்ட கிழக்குமாகாண ஆளுநரை வரவேற்கும் முகமாக  மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர்கள்  மற்றும் ஆலய நிர்வாக சபையினரால்  ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார் .

இந்த விசேட பூஜை வழிபாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஆந்திர பிரதேச ஆளுநரின் மகனும் கலந்துகொண்டார் .

ஆலய வழிபாட்டினை தொடர்ந்து ஆலய புனரமைப்பு பணிகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டரிந்துகொண்டதுடன் புனரமைக்கப்படுகின்ற ஆலய குலத்தினையும் பார்வையிட்டார்