மட்டக்களப்பு - விளாவட்டவானில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கௌரவ வரவேற்பு விழா(S.t)

மட்டக்களப்பு -மண்முனை மேற்கு பிரதேசத்திற்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தில் மண்முனை மேற்கு பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு கௌரவ பாராட்டும் வரவேற்பு விழாவும் விளாவட்டவான் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய முன்றலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வினை விளாவட்டவான் கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் விளாவட்டவான் சமுகமட்ட அமைப்புக்களும் இணைந்து நடாத்தியிருந்தார்கள்.

இதற்கு மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செ.சண்முகராஜா, உப தவிசாளர் பொ.செல்லத்துரை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.