வீதி அபிவிருத்தி தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது ஆளுநர் தெரிவிப்பு

 (லியோன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்


கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மாவடத்தில் உள்ள வீதிகளின் நிலைமை  தொடர்பாக தெளிவு படுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்

(19) பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது கிழக்குமாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம இவ்வாறு தெரிவித்தார்

கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் வாகரை பிரதேச பிரதான வீதியானது  மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது .

இது தொடர்பாக  நான்  கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவிக்கப்பட்டு  இது தொடர்பான  தகவல்களை பெற்றுள்ளேன் .

இந்த விடயத்தில் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி  அதிகார சபை இது தொடர்பில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த வீதி அபிவிருத்தியானது முன்னைய அரசாங்கத்தினால் சீன நிறுவனமொன்றுக்கு  வழங்கப்பட்டு  செய்து முடிக்கப்பட்ட இந்த பிரதான வீதி இன்று குன்றும் குழியுமாக உடைந்த மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது .

இந்த வீதி ஊடாக நாளொன்றுக்கு 50ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் ,பாடசாலை மாணவர்கள் ,பொதுமக்கள் , தொழில் துறைகளுக்கும் செல்லும் பயணிகள் , மணல் மற்றும் பாரமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செல்லும் கிழக்குமாகாணத்தின் பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகின்றது .

வாகரை பிரதேசத்தில் இந்த பிரதான வீதியின் 50 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு பெரும் சிரமத்தை  எதிர்கொள்கின்றார்கள்  
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ள இவ்வாறான  செயல்பாட்டால் மக்கள் எதிர் நோக்கின்ற அசௌகரியங்களுக்கு கிழக்குமாகாண மக்கள்  என்ற ரீதியில் நான் மிக மனவருத்தப்படுகின்றேன் .

இதனை  மத்திய அரசுக்கு தெரியபடுத்தி  உடனடியாக புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது .
காரணம் தற்போது மழை காலத்தால் ஆரம்பித்துள்ளது   வெள்ளநீறினால் இன்னும் மோசமான பாதிப்புக்களை  ஏற்படக்கூடிய நிலை உள்ளது .
அவ்வாறான  நிலை ஏற்பட்டால் மிக  மோசமான வீதி அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளதாக  வீதி அபிவிருத்தி அதிகாரசபை மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட கூடிய வாய்ப்புகள்  உள்ளது ..

இதேவேளை மட்டக்களப்பு நகரில் நிர்மாணிக்கப்படுகின்ற கோட்டமுனை பாலம் கடந்த மூன்று வருடங்களாக மேலாக ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் இன்னும் முடிவடையவில்லை . மிக மோசமான முகவர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டு இன்னும்  பால வேலைகள் முடியடையாத நிலையில் இதன் ஊடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் , தொழிலுக்கு செல்வோரும் 15 நிமிடங்கள் தாமதமாகி செல்ல வேண்டிய நிலை உள்ளது .
இது தொடர்பாக ஜனாதிபதியின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் ,வாகரை பிரதேசத்தின்  பிரதான வீதியின் புனரமைப்பு  அபிவிருத்தி நடவடிக்கைகளை கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை கிழக்கு மாகாண மக்களுக்காக  உடன் முன்னெடுக்கும் என எதிர்பாக்கின்றார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்