ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் தேற்றாத்தீவில் இடம் பெற்ற மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ம.தெ.எ.பற்று பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் வி.சிவபிரியா தலைமையில் நேற்று (08.03.2018) வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் ஆரம்பமாகியது.

இவ் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ் நிகழ்வில் பாரம்பரிய உணவு போட்டி கயிறு இழுத்தல் போட்டி மற்றும் நுண்கடனால் எற்படும் பிரச்சனை சம்பந்தமான வீதி நாடகம் போன்றனவும் இடம் பெற்றதுடன். பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.