பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம்


 (லியோன்)



மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
    

பொலிஸ் திணைக்களங்களில் கடைமையாற்றும்  பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுகதேகியாக நாட்டு  மக்களுக்கு சேவையினை வழங்க  வேண்டும் என்ற நோக்குடன் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் சிந்தனைக்கு அமைவாக  35 வயதுற்கு மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதன் கீழ் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின்  வழிகாட்டலின் கீழ் கொழும்பு நாரன்பிட்டி பொலிஸ் திணைக்கள வைத்தியசாலை வைத்தியர்களுடன் இணைந்து  மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட  பிரதி  பொலிஸ்மா  அதிபர்   டப்ளியு . ஜெ . ஜாகொட ஆராச்சி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்களத்தின்  12 பொலிஸ் பிரிவுகுற்பட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம் இன்று மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு  மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு  முன்னெடுக்கப்பட்ட மருத்துவ முகாம் நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  எச் .டி .கே .எஸ் கபில  ஜயசேகர, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மென்டிஸ் , நாரான்பிட்டி பொலிஸ் வைத்தியசாலை வைத்தியர்களான  வைத்தியர் ரோஹித பெர்னாண்டோ , பிரதீப் விக்ரமநாயக , பிரபாத் சில்வா , சபுமல் ஹல்கள்ள , டி சி .விதானடி .பி . விஜேசுந்தர , வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் , ,மட்டக்களப்பு  மாவட்ட 12 பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் . பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்