அனோரியா ஆங்கில அக்கடமி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு  நவற்குடா அமைந்துள்ள அனோரியாஆங்கில அக்கடமி கல்வி நிலைய மாணவர்களை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (24)  மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு நவற்குடா அமைந்துள்ள அனோரியா ஆங்கில அக்கடமி  கல்விநிலையத்தின்  நிர்வாகியும் , ஆசிரியருமான  கு . குமரேசன் தலைமையில் மட்டக்களப்பு  செலிங்கோ  லைப்  கிளை  அலுவலகத்தில்     நடைபெற்றது

இந்நிகழ்வில் விருந்தினர்களாக   மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை    04 இன்   முகாமையாளர்     எஸ் .வேனுகரன் , பிராந்திய முகாமையாளர் கே .சுமேந்திரன் மற்றும்  மட்டக்களப்பு  செலிங்கோ  லைப்  கிளை, உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந் நிகழ்வில்  மாணவர்களின் திறமைகளுக்கு  மாணவர்களை  கௌரவித்து ,சான்றிதழ்களும் , வெற்றி கிண்ணங்களும்   வழங்கி வைக்கப்பட்டது  
இந்த நிகழ்வில்   மாணவர்கள் பெற்றோர்  ஆகியோர்  கலந்து  சிறப்பித்தார்கள்