இலங்கையின் முதலாவது உள்ளூர் விமான நிலையமாக மட்டக்களப்பு விமான நிலையம் திறந்துவைப்பு

(லியோன்)
இலங்கையின் முதலாவது உள்ளூர் விமானம் நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.
விமானப்படையின் கட்டுப்பாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக இருந்த மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்துக்காக இன்று திறந்துவைக்கப்பட்டது.
விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த விமான நிலையம் 2016ஆம் ஆண்டு மே31ஆம் திகதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையால் பொறுப்பேற்கப்பட்டது.

இந்த விமான நிலையம் விமானப் 1400 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.46 மீற்றர் அகலமும், 1066 மீற்றர் நீளமும் கொண்டதாக இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் போக்குவரத்துக்காக திறந்து விடப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கு, உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்க பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் சேவைகளை வழங்கவுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று காலை போக்குவரத்து,சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் போக்குவரத்து,சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேயவர்த்தன,இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா,பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,ஞா.சிறிநேசன்,அலிசாகீர் மௌலானா,மட்டக்களப்பு சிவில் விமான சேவை நிலைய பொறுப்பதிகாரி சிந்திக்க பொன்சேகா உட்பட சிவிலி விமான சேவைகள் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு விமான நிலையத்திற்குரிய இணையத்தளம் திறந்துவை;ககப்பட்டதுடன் மத்தல,கட்டுநாயக்க,மட்டக்களப்பு விமான நிலையங்களை இணைத்து மேற்கொள்ளப்படவுள்ள விமான சேவைகளுக்கான ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

மட்டக்களப்பு விமான நிலையத்தில் இருந்து ஞாயிறு, வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளின் விமானப்பயணங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கான ஒரு வழிக்கட்டணமாக 100 அமெரிக்க டொலரும் இருவழியாக 170டொலரும் அறவிடப்படுவதாகவும் விமான சேவைகளுக்கு ஏற்றவாறு தொகைகள் மாறுபடலாம் எனவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.