சர்வதேச ரீதியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் 109  வருட பாடசாலை வரலாற்றில் சர்வதேச ரீதியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் திருமதி .திலகவதி ஹரிதாஸ்  (24) கல்லூரியில் நடைபெற்றது .


கொழும்பு பண்டாரநாயக்க பாலிகா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சர்வதேச எறிபந்து சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தி சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் வெற்றிப்பெற்று சாதனை படைத்துள்ளனர் .

இலங்கை எறிபந்து சம்மேளத்தினால் கடந்த 21ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக பாலிகா மகா வித்தியாலத்தில் நடத்தப்பட்ட  சர்வதேச எறிபந்து சுற்றுப்போட்டி  2018 ல்  இலங்கையில் இருந்து 3 பாடசாலைகளும் ,இந்தியா பெங்குலூரில் இருந்து ஒரு பாடசாலையும் கலந்துகொண்டன .

இந்த போட்டியில் இலங்கையில் இருந்து மட்டக்களப்பு உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி ,  ஓமாகம் மாகளிர் வித்தியாலயம் , கொழும்பு பண்டாரநாயக்க பாலிகா மகா வித்தியாலய மாணவர்கள் இந்த சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்தியா மற்றும் இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சர்வதேச எறிபந்து சுற்றுப்போட்டியில் கலந்துகொண்ட விளையாடிய மட்டக்களப்பு உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் இந்தியா பெங்குலூர் பாடசாலை மாணவிகளுடன் விளையாடி முதல் சுற்றில்  25 – 15  என்ற புள்ளிகளையும்  , இரண்டாவது சுற்றில் 25-17  என்ற புள்ளிகளையும்  பெற்று வெற்றி பெற்றதுடன் இலங்கைக்கும் , மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் .

இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட எறிபந்து பந்து பயிற்றுவிப்பாளர் ஜே சி .நிமலன் , மட்டக்களப்பு உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி உடல்கல்வி பொறுப்பாசிரியர் கிரிஷாந்தினி நிமலன் , மட்டக்களப்பு கல்வி வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் வி .லவக்குமார் , கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கௌரவத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர் .