(லியோன்)
இன்று
குருத்தோலை ஞாயிறு தினமாகும் .இன்றைய நாளில் உலகில்
உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட திருப்பலிகள் இடம்பெற்றன .
இந்நிகழ்வானது இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன் ஜெருசலேம் நகரில் நடந்த நிகழ்வாகும் .இன்றைய நாளை
உலகில் உள்ள அணைத்தது கிறிஸ்தவர்களும் விசேட
விதமாக நினைவு கூர்ந்து வருகின்றனர். .
கிறிஸ்தவர்களின் புனித
நாட்களில் மிக முக்கிய நாளாக குருத்தோலை
ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது .,இந்நாளை
நினைவு கூறும் முகமாக மட்டக்களப்பு மரியாள்
பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்
ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி இடம்பெற்றது .
இத்திருப்பலியில்
பங்கு,தந்தை
சி வி .அன்னதாஸ் ,உதவி பங்குதந்தை லொயிட் , அருட்சகோதரர்கள் ,அருட்சகோதரிகள்
மற்றும் பங்கு மக்களும் கலந்துகொண்டனர் .