நீதி தவறிய அரசை பாதுகாக்கும் வியாபாரிகளை கண்டிக்கின்றோம்


 (லியோன்)


மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலார் சந்திப்பு  மட்டக்களப்பில் நடைபெற்றது .


நீதி தவறிய இலங்கை அரசை பாதுகாக்க நினைக்கும் வியாபாரிகளை கண்டிக்கின்றோம் எனும் தலைப்பின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அமல்ராஜ் அமலநாயகி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் இணையம் அலுவலகத்தில் இந்த ஊடகவிலாளர் சந்திப்பு நடைபெற்றது .
  .
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி அமல்ராஜ் அமலநாயகி  கருத்து தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் சபையானது  , சர்வதேசம் , தமிழ்  மக்கள் , சிங்கள மக்கள் என அனைவரையும் ஒன்று சேர்த்து ஏமாற்றுவதுடன் தனது அரசியல் நலன்களை முன்னிறுத்தி வருகின்றது .

இலங்கை அரசாங்கம் ஆட்சிகள் மாறினாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சிறுபான்மையின் மக்களின் உரிமை சார்விடயங்களில் அனைத்து ஆளும் தரப்பினது நிலைப்பாடும் ஒன்றாகவே உள்ளது .

இவ்வாறன நிலையில் அரச சார்பற்ற அமைப்பாக தன்னை அடையாளப்படுத்தும் தென்னிலங்கையை சேர்ந்த நிறுவனமானது , காணமல் ஆக்க்ப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரை தெற்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்திற்கு அழைத்து செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது .

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வாழ்வாதாரம்  வழங்க போவதாகவும்  காணாமல் ஆக்கப்பட்டோர்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக அழைப்பதாக தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ,.

இவ்வாறான செயல்பாடானது  இலங்கை அரசாங்கத்தின் மீதான சர்வதேசத்தின் அழுத்தத்தை குறைப்பதே ஆகும் ,

கடந்த பல வருடங்களாக ஒற்றுமையாக பொதுவான நோக்குடன் செயல்பட்டு வரும் நிலையில் தவறான  கருத்துக்களையும் , பொய்யான வாக்குறிதிகளை வழங்கி  இலங்கை அரசு மற்றும் இராணுவத்தினரை பாதுகாப்பதையும் நோக்கமாக கொண்டு செயற்படும் இவாறான நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகளுக்கு மட்டக்களப்பு மாவட்டம்  வலிந்து  காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள்  சங்கத்தினால் வேண்டுகோள் விடுப்பதாக சங்கத்தின் தலைவி  தெரிவித்தார்  .

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டம்  வலிந்து  காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள்  சங்கத்தின் செயலாளர் உட்பட அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்