பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு


(லியோன்)


மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வறுமை  கோட்டின்கீழ் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


அமெரிக்கா கலிபோனியா பல்கலைக்கழகத்தின் இராசயனவியல் பேராசிரியரும் , மட்டக்களப்பு  புனித மிக்கேல் கல்லூரியின்  பழைய மாணவனுமான ரவிராஜ் அருளானந்தம் நிதி உதவியின் கீழ் பியர் டு பியர் அமைப்பின் ஊடாக பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயா ஆசிரியர் டி .ஜோன் ஒழுங்கமைப்பில் தெரிவு செய்யப்பட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன்  ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வறுமை கோட்டின்கீழ் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களில் தெரிவு செய்யப்பட பாடசாலைகளான மட்டக்களப்பு கரையான்கரை கணேசர் வித்தியாலயம் , பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயம் , மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மாணவர்களுக்கு  இந்த துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வு  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது .

இந்நிகழ்வில் பியர் டு பியர் அமைப்பின் பொதுமுகாமையாளர் எம் . ஞானேந்திரன் , பியர் டு பியர் அமைப்பின் உறுப்பினர்களான ஆர் . நல்லரட்ணம், என் . நகுலேஸ்வரன் , மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக தொழில் வழிகாட்டல் ,  நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எ .ஜெகநாதன் மற்றும்  நிகழ்வில் கலந்துகொண்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் ,அதிபர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் உட்பட வலயக்லவி அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்