வவுனியாவை சேர்ந்த யுவதி வாழைச்சேனை புலிபாய்ந்தகல் பகுதியில் சடலமாக மீட்பு


(லியோன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புலிபாய்ந்தகல் பகுதியில் உள்ள ஆற்றிலிந்து  கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர்
(18) ஞாயிற்றுக்கிழமை  சடலமாக மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவிக்கினர்.


சடலமாக மீட்கப்பட்ட  பெண் சவுதியல் பணிபுரிந்த  வவுனியா கணேசபுரம் மரக்காப்பளை வீதியை  சேர்ந்த 32 வயதான மருதை சுதர்சினி  என அவரின் உறவினர்களாக அடையானம் காணப்பட்டதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் 
   
குறித்த  பெண் தொடர்பாக அவரது சகோதரி தெரிவிக்கையில்  தங்களது குடும்பத்தில் 3 வது பிள்ளையான இவர் தந்தையார் உயிரிழந்துள்ள நிலையில்  குடும்பத்தில் ஏற்பட்ட வறுமைகாரணமாகவும்  சகோதரனை படிப்பிப்பதற்காக மத்தியகிழக்கு நாட்டில்  வீட்டுபணிப் பெண்ணாக வேலை பார்த்துவந்துள்ளார் 

இலங்கையில் இருந்து  கடந்த 2016 ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்நகரில் வீட்டுபணிப்பெண்ணாக சென்று பணிபுரிந்துள்ளார் .அங்கு வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீண்டு  நாட்டிற்கு கடந்த 16 ம்திகதி திரும்புவதாகவும் விமானநிலையத்திற்கு வருமாறு சகோதரிக்கு தொலைபேசில் தெரிவித்துள்ளார்.

இதனையத்து குறித்த திகதியில் சகோதரியின் கணவர் விமானநிலையத்திற்கு சென்று சுமார் 10 மணித்தியாலயம் காத்திருந்தபோதும் அவர் அங்குவரவில்லை அத்துடன் அவரின் கையடக்க தொலைபேசியும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் அங்கிருந்த வீட்டிற்கு திருப்பிவிட்டதாகவும் அவர் எங்க சென்றார் என்ன நடந்தது என தேடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் மட்டக்களப்பு வாமைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து எனது சகோதரி சடலமாக மீட்கப்பட்டாதக  தெரிவிக்கப்பட்டது

இதனை தொடர்ந்து நாங்கள் உடனடியாக வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் உள்ள பிரேத அறயில் சகோதரியை அடையாளம் காட்டினேம்.

எனது சகோதரியை  திட்டமிட்டு கொலை செய்துவிட்டு அவரின் உடலில் இருந்த தங்கநகைகள் கொள்ளையடித்துள்ளனர் . அவரின் சடலத்துக்கு அருகில்  பெறும் நகைபெட்டிகள்  அவரின் பயணப்பை  .செருப்பு கடவுச்சிட்டு .அடையாள அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளது

இவ்வாறான ஒரு நிலமை எந்த பெண்ணுக்கம் இனி ஏற்படக்கூடாது அதேவேளை எனது சகோதரியின் கொலைக்கு நீதி வேண்டும் என சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரி எம்.சுபானந்தராணி அழுது புலம்பியவாறு தெரிவித்தார் 

இதேவேளை குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை முடிந்ததும் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக வாழசைசேனை பொலிசார் பலகோணங்களில் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்..