வைத்தியசாலை கழிவுகளை எரிக்கும் நிலையம் தொடர்பான கலந்துரையாடல்

 (லியோன்)


 மட்டக்களப்பு  திராய்மடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  கழிவுப்பொருள் எரிக்கும் நிலையம் மற்றும் அங்கு எரிக்கப்படுகின்ற பொருட்களில் இருந்து வெளியாகும் புகை மற்றும் துர்நாற்றம்  தொடர்பாக அப்பகுதி பொதுமக்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .


மட்டக்களப்பு திராய்மடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கழிவு எரிக்கும் நிலையத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அகற்றப்படுகின்ற கழிவுப்பொருட்கள், இறந்த மனித உடலங்களின் கழிவுகள் இங்கு எரிக்கப்படுவதனால்  இந்த நிலையத்தில் இருந்து வெளியாகும் புகை மற்றும் துர்நாற்றம் போன்ற வற்றால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதோடு நோவாய்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்களால் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இவ்வாறன நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  கே குணநாதன் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் ஞா .ஸ்ரீநேசன் ஆகியோரின் தலைமையில் திராய்மடு சுவிஸ் கிராமம் , பனிச்சையடி ,கொக்குவில் ஆகிய கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்களுடனான  கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ,மண்டபத்தில் நடைபெற்றது .

இதன்போது மத்திய சுற்றாடல் அதிகார சபை  சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் தெரிவிக்கையில் குறித்த கழிவு பொருட்களை எரிக்கும் நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் உரிய முறையில் கையாளப்படாமை , இயந்திரங்களின் இயக்க பராமரிப்பு இல்லாத போன்ற காரணங்களினால் இங்கு எரிக்கப்படுகின்ற பொருட்களில் இருந்து வெளியேற்றப்படுகின்ற புகை மற்றும்  ,துர்நாற்றம் போன்றவை  ஏற்பட வாய்ப்பாக அமைகின்றது எனவே உரிய முறையில் பராமரிப்புகளுடன்   இயந்திரங்களை முறையாக கையாளப்படும் போது இவ்வாறான நிலையை கட்டுபடுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டது ,

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வைத்திய அதிகாரிகள் இவ்வாறன விடயங்களை கவணத்தில் கொண்டு எதிர்வரும் காலங்களை இதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கழிவு பொருள் எரிக்கும் நிலையத்தில் எவ்வாறான பொருட்கள் ஏறிக்கப்படுகின்றன என்பது தொடர்பாக இப்பகுதி மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மூவர் உட்பட கிராமசேவை உத்தியோகத்தருக்கும்  நிலையத்தினை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்குவதாகவும்  தெரிவிக்கப்பட்டது .

இதேவேளை இன்று கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமாத காலப்பகுதில் பரிசீலனை செய்து  இதற்கான அறிக்கைகள் சமர்பிக்கப்படும் என வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்  

குறித்த கலந்துரையாடலில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இப்ரா லெப்பை தலைமையிலான வைத்தியசாலை வைத்திய  அதிகாரிகள் ,, திராய்மடு சுவிஸ் கிராமம் , பனிச்சையடி ,கொக்குவில் ஆகிய கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , மத்திய சுற்றாடல் அதிகார சபை  சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் எஸ் . கோகுலன் , பிரதேச சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்  கே .லோகராஜா ,பிராந்திய சுகாதார பணிமனை வைத்திய அதிகாரி வைத்தியர் திருமதி கிரேஸ் , நவரட்ணராஜா ,பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் .கிரிசுதன் , மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ஆகியோர் கலந்துகொண்டனர்