ஓந்தாச்சிமடம் கடற்கரை தூய்மையாகியது


(ராம்)
பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அவர்களின் "Love All Serve All" (LASA) எனும் சத்திய வாக்கிற்கமைய இலங்கைக்கான சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின்  கிழக்கு பிராந்திய அமைப்பின் பொதுச் சேவை பிரிவின் (Public Outreach Programme Wing) ஏற்பாட்டில் “பூமியை பாதுகாப்போம்"(Save the Planet) எனும் திட்டத்தின் ஒரு அங்கமாக கரையோரங்களை தூய்மையாக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின்  கிழக்கு பிராந்திய அமைப்பின் உபதலைவர் திரு. ஜெகநாதன் அவர்கள் தெரிவித்தார். 



அதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் கிராமத்திலுள்ள கடற்கரை மற்றும் அதனை அண்டிய சுமார் இரண்டு கிலோ மீற்றர் நீளமான பகுதி கடந்த 24.02.2018 அன்று துப்பரவு செய்யப்பட்டதாகவும் இதன்போது குறித்த பகுதியில் காணப்பட்ட பொலித்தீன், பிளாஸ்ட்ரிக், கண்ணாடி போன்ற திண்மக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான திண்மக் கழிவகற்றும் வாகனம்மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டதாகவும், இச்செயற்பாட்டில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள சாயி நிலையங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் மற்றும் பெரியோர் பெருமளவில் கலந்துகொண்டதுடன் ம.தெ.எ.ப. பிரதேச சபை ஊழியர்களும் ஆர்வமுடன் பங்குகொண்டதாகவும் அவர் தெரிவித்தார் .

அத்துடன் ஓந்தாச்சிமடம் கிராமத்தைச்சேர்ந்த பொதுமக்கள், சிறுவர்கள், பெரியோர்; மற்றும் அண்மையில் இடம்பெற்ற உ;ள்ளுராட்சி தேர்தலில் பொட்டியிட்டு வெற்றிபெற்ற சமூக ஆர்வலர் என பலரும் ஆர்வமுடன் தாமாக முன்வந்து கலந்துகொண்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார்.