விழிப்புலனற்றோர்களுக்கான கைத்தொழில் நிலையம் அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது .


(லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கல்லடி நோச்சிமுனையில் அமைந்துள்ள மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்தில்  விளிப்புனர்வற்றவகளின் வாழ்வியல் ரீதியில் முன்னேறிச் செல்வதற்கான  உற்பத்தி பொருட்களை தாயாரிக்கும் கைத்தொழில் நிலையத்தினை  மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குறித்த நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தானியங்களை மாவாக்குதல் , பேப்பர் பிளேட் ,ஈக்கிளினால் செய்யப்படும் உற்பத்தி நிலையத்தினை திறந்து வைத்தார் ..

இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி, மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக விசேட கல்வி இணைப்பாளர் எம் .தயானந்தன் ,உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஆலோசகர்கள்,  சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்