யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்கும் நடவடிக்கை


(லியோன்)

வடகிழக்கில் யுத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் 27ஆயிரம் கோவைகள் நட்;ட ஈடு வழங்கப்படாமல் புனர்வாழ்வு அதிகாரசபையில் தேங்கியிருப்பதாக புனர்வாழ்வு அதிகாரசபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் என்.புவனேந்திரன் தெரிவித்தார்.


1983ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நஸ்ட ஈடுகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் அசாதாரண நிலமைகளினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் நஸ்ட ஈடுகளைப்பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும் நஸ்ட ஈடுகளை பெற்றுக்கொள்ளாத நிறுவனங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் டேபா மண்டபத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புனர்வாழ்வு அதிகாரசபையின் நிறைவேற்றுப்பணிப்பாளர் என்.புவனேந்திரன் உட்பட புனர்வாழ்வு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள்,பாதிக்கப்பட்டவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

கடந்த காலத்தில் தேங்கியுள்ள கோவைகளில் உள்ள குறைபாடுகளை அந்த கோவைக்குரியவர்களை அழைத்து கண்டறிந்து அவர்களுக்கான நஸ்ட ஈடுகளை வழங்கும் வகையிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் உதவியுடன் பயனாளிகள் அழைக்கப்பட்டு அவர்களின் கோவைகள் பரிசீலனை செய்யப்பட்டதுடன் பூர்த்தியடையாத கோவைகளை பூர்த்திசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன