சிறுவர்களின் உரிமைகளை வலுப்படுத்தும் கலந்துரையாடல்


(லியோன்)

சிறுவர்களின் உரிமைகளை வலுப்படுத்தும் வகையில் அமைச்சரவையின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர் கழகங்களை வலுப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றது.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் கழகங்களை வழுப்படுத்தி அதன் மூலம் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் நன்னடத்தை திணைக்களமும் இணைந்து இந்த கலந்துரையாடலை மேற்கொண்டு வருகின்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல்  நிகழ்வில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைத்தல் தொடர்பான நிகழ்வினை மையமாக கொண்டு குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு நியு அரோ நிறுவனத்தின் அனுசரணையில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது .

.இதன்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகங்களில் உள்ள 10 சிறுவர்கள் ஊடாக தொண்டர் அடிப்படையில் கடமையாற்றும் தொண்டர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பிரதேச மட்டங்களில் சிறுவர் உரிமைகளை பேணுவதற்காக முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்கள் மாவட்டம் மற்றும் மாகாண மட்டங்கள் ஊடாக தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் , மண்முனை வடக்கு சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் உதயராஜ் , மாவட்ட செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் வி . குகதாசன் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , கிராம மட்ட சிறுவர் உரிமைகள் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் , பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்