இறைச்சி கடைகள் முன்னறிவித்தல் இன்றி மூடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் விசனம் (VIDEO & PHOTOS


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர பொதுச்சந்தை மற்றும் இருதயபுரம் பகுதியில் உள்ள  இறைச்சி கடைகள் முன்னறிவித்தல் இன்றி மூடப்பட்டுள்ளதாக  கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் .



மட்டக்களப்பு  மாநகர பொதுச்சந்தை உள்ள இரண்டு மாட்டிறைச்சி கடைகளும் ,இருதயபுரம் சந்தை பகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடையும் எதுவித முன்னறிவித்தல் இன்றி மாநகர சபையினால் மூடப்பட்டுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்  


இந்த தொடர்பாக கடை உரிமையாளர்கள் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபையின் நடைமுறையில் உள்ள  சட்டத்திற்கு அமைய  2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டக்களப்பு  மாநகர பொதுச்சந்தை உள்ள
இரண்டு இறைச்சி கடைகளில் முதலாவது கடை 9 இலட்சம்  1000 ஆயிரம் ரூபா  குத்தகைக்கும், கடை வாடகை 36 ஆயிரம் ரூபாவுக்கும் ,இரண்டாவது கடை 6 இலட்சம் 41 ஆயிரம்  குத்தகைக்கும்,  கடை வாடகை  36 ஆயிரம் ரூபாவுக்கும், இருதயபுரம் கடை 7 இலட்சம்  70 ஆயிரம் ரூபா  குத்தகைக்கும்,  ,கடை வாடகை 36 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் இறைச்சி கடைகள்  குத்தகைக்கு  எடுக்கப்பட்டு பொதுசுகாதார பரிசோதகர் ,மற்றும் கிராம சேவை உத்தியோகத்தரின் அத்தாச்சிப்படுத்தப்பட்டு  கால்நடைகள்  இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக தெரிவித்தனர் .


இந்த நிலையில் 2018 மார்ச் முதலாம் திகதி முதல்   மட்டக்களப்பு  மாநகர சபையினால் எந்த வித முன் அறிவித்தலும் இன்றி மட்டக்களப்பு மாநகர பொதுச்சந்தை மற்றும் இருதயபுரம் பகுதியில் உள்ள  இறைச்சி கடைகள்  மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்


இதன் காரணமாக தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் நஷ்டத்தை எதிர் நோக்கியுள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவிப்பதோடு  2018 ஆண்டு ஜனவரி மாதம் இறைச்சி கடைகள் குத்தகைக்கு எடுக்கப்பட்ட போது நடைமுறையில் இருந்த சட்டத்திற்கு அமைய தமது வியாபர நடவடிக்கையினை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்


இது தொடர்பாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளரிடம் கேட்டபோது அவர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு நகரில் உணவுக்காக விற்கப்பட்டும் கால்நடை இறைச்சி சட்டத்திற்கு முரணான வகையில் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட  கால்நடைகள் உணவுக்காக வெட்டப்படுவதாகவும் , அதிகளவில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் வெட்டப்பட்டு  உணவுக்காக விற்பனை செய்வதாகவும் , மனித பாவனைக்கு பொருத்தமற்ற  இறைச்சி வகை விற்பனை செய்வதாக மாநகர சபைக்கு  கிடைக்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த புதிய சட்ட நடவடிக்கையினை  முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்  . 

இது தொடர்பாக கடந்த 2017 ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் அறிவித்தலும் ,இரண்டாவது அறிவித்தல் 2018 .02.28  ஆம் திகதி கடை உரிமையாளர்களுக்கு புதிய சட்ட விதிமுறைகள் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டதுடன், குறித்த இடங்களில்காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்  2018 மார்ச் முதலாம் திகதி முதல் மட்டக்களப்பு மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகள்  மனித நுகர்வுக்கு  உகந்த நிலையில் உள்ளது என கால்நடை வைத்திய அதிகாரியினால் சான்றிதழ் வழங்கும் பட்சத்தில் அது இறைச்சிக்காக வெட்டப்பட்டு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்  

தற்போதைய நிலையில் மாநகர சபையில் கால்நடை வைத்திய அதிகாரி ஒருவர் இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு வார காலம் இறைச்சி கடைகள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது ,  எதிர் வரும் திங்கள்கிழமை முதல் வைத்திய அதிகாரி ஒருவர்  நியமிக்கப்பட்டு குறித்த சட்ட விதிமுறைகள்  நடைமுறைப் படுத்தப்படவுள்ளது . .
எதிர் வரும் திங்கள்கிழமை முதல் மட்டக்களப்பு மாநகர சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்ட அறிவுறுத்தலுக்கு அமைய இறைச்சிக்காக வெட்டப்படும் கால்நடைகள் கால்நடை  வைத்தியரின் சிபார்சுக்கு அமைய  மாநகர சபையினால் பரிசோதிக்கப்பட்டு  இறைச்சி விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன் தெரிவித்தார் .

இதேவேளை சட்டத்திற்கு முரணான வகையில் கால்நடைகள் வெட்டப்பட்டு விற்கப்படும் இறைச்சி மற்றும் மனித பாவனைக்கு பொருத்தமற்ற  இறைச்சி வகைகள் விநியோகம் செய்யும் நபருக்கு எதிராக நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தப்படுவார் என மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன் தெரிவித்தார் .