பால்நிலை அறிவூட்டல் பகுதி பொது நூலகத்தில் திறக்கப்பட்டுள்ளது


(லியோன்)

பால்நிலை அறிவூட்டல் பகுதி இன்று மட்டக்களப்பு பொது நூலகத்தில்  திறந்து வைக்கப்பட்டுள்ளது 


கிழக்கு பல்கலைக்கழகத்தின் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவ அலகின் யுனெஸ்கோ நிறுவன பங்குபற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பால்நிலை அறிவூட்டல் பகுதிகள்

மட்டக்களப்பு பொது நூலகத்திலும் , கிழக்கு பல்கலைக்கழகத்திலும் திறந்து வைக்கப்படவுள்ளது .

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக  மட்டக்களப்பு பொது நூலகத்தின் உசாத்துணைப் பிரிவில் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ உப நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் த .ரமணன் ஒழுங்கமைப்பில் பால்நிலை அறிவூட்டல் பகுதி  மட்டக்களப்பு பொது நூலகத்தின் உசாத்துணைப் பிரிவில் இன்று  திறந்து வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் த. ஜெயசிங்கம் , துணை வேந்தர் வைத்திய கலாநிதி கே .இ . கருணாகரன் , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் , பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , யுனெஸ்கோ நிகழ்ச்சித் திட்ட பிரதான ஒருங்கிணைப்பாளர்  திருமதி  பாரதி கெனடி ,உப திட்ட ஒருங்கிணைப்பாளர்களான கலாநிதி  ஜி கெனடி ,கலாநிதி மதிவேந்தன் ,கலாநிதி த ,பிரபாகரன் , த. ரமணன் , கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகளான கலாநிதி திருமதி எம் .வினோபாபா , திருமதி ,ரோஸானா ராகல் ,கிழக்கு பல்கலைக்கழக பதில் நூலகர் ஜெயராஜ் மற்றும் மட்டக்களப்பு பொது நூலகர்கள் , பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .

பால்நிலை தகவல் பகுதி நூலகங்களில் ஸ்தாபித்தல் முக்கிய நோக்கம் பால்நிலை அறிவூட்டலை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் மேம்படுதலாகும் .

இத்தகைய பகுதிகள் பல்வேறுபட்ட தகவல் சாதனங்களை காட்சிப்படுத்துவதால் நூலக பாவனையாருக்கு பால்நிலை தொடர்பான அறிவு வழங்குவதோடு ஆய்வாளர்களுக்கு தேவையான தகவல் வளங்கள் அபிவிருத்தி செய்கின்ற பேண்தகு நிலையை  உறுதிப்படுத்த நூலகம் அமைகின்றது . .