செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு


 (லியோன்)

சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் “வலுவான பெண் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறாள் “ எனும் தொனிப்பொருளில் பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட் கண்காட்சியும் விற்பனையும் அதனுடன் இணைந்ததாக மகளிர் தின நிகழ்வும் செங்கலடி ஏறாவூர் பற்று
  பிரதேச செயலாளர்  என். வில்வரெடனம்  தலைமையில் நடைபெற்றது .
 

இந்நிகழ்வில் அதிதியாக மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த்  கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்  

இந்நிகழ்வில்  ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டதுடன் தொழில் முயற்சியாளர்களில் தெரிவு செய்யப்பட சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

இதேவேளை சிறுவர்  மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தினால் முன்பள்ளிகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

 இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்  திருமதி நவரூப ரஞ்சனி முகுந்தன் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் , பொதுஅமைப்புக்களின் அங்கத்தவர்கள் , மாணவர்கள், பொதுமக்கள்  என பலர் கலந்துகொண்டனர் .