Breaking News

தமிழரசுக்கட்சி ஆரம்பிக்க முன்னரே சுதந்திரன் பத்திரிகையை தந்தை செல்வா ஆரம்பித்தார் –பா.அரியநேத்திரன்

இலங்கைதமிழரசு கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னமே தந்தைசெல்வா சுதந்திரன் நாளிதழை ஆரம்பித்தார் தந்தை செல்வாவின் தீர்க்கதரிசனம் ஊடகத்திலும் இருந்தது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கைதமிழரசுகட்சி தலைவரும் இலங்கைதமிழரசுகட்சி ஊடகசெயலாளருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

இலங்கைதமிழரசுகட்சியின் உத்தியோக பூர்வ பத்திரிகையான “புதியசுதந்திரன்” வெளியீட்டு விழா மட்டக்களப்பு நகரசபைமண்டபத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தலைமையில் இடம்பெற்றது.

அதில் கலந்துகொண்டு நிறைவுறையாற்றிய பா.அரியநேத்திரன் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கைதமிழரசு கட்சியின் உத்தியோக பூர்வ நாளிதழாக பேசப்பட்ட அப்போதய “சுதந்திரன்” பத்திரிகையை தந்தைசெல்வா இலங்கைதமிழரசுக்கட்சியை ஆரம்பிப்பதற்கு இரண்டுவருடங்களுக்குமுன்னமே அதாவது இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் கடந்த 1947ம் ஆண்டு யூண்மாதம் 1,ம் திகதி
கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தையில் சொந்தமாக ஒரு அச்சகத்தை வாங்கி அந்த அச்சகத்துக்கு சுதந்திரன் அச்சகம் என பெயரிட்டு அதில் சுதந்திரன் பத்திரிகை என நாளிதழுக்கும் பெயரிட்டு தொடங்கினார்.

இந்த சுதந்திரன் பத்திரிகை உருவாக்கி சரியாக இரண்டுவருடம் ஏழுமாதங்களுக்கு பின்பே 1949 டிசம்பர் 18,ம் திகதி கொழும்பு மருதானை எழுதுவிளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தந்தைசெல்வா இலங்கைதமிழரசுக்கட்சியை
உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தினார். தந்தைசெல்வா சுதந்திரன் பத்திரிகை முதலாவது பத்திரிகைஆசிரியராக இந்தியவம்சாவளி தமிழரும் கல்விமானுமான
கோவாந்தரம் நடேச ஐயர் என்பவர் 1947ம் ஆண்டு நியமித்தார்.

இலங்கைதமிழரசு கட்சி நிறுவுணரான தந்தைசெல்வா தமிழரசுக்கட்சி
உத்தியோகபூர்வ பத்திரிகையாக சுதந்திரன் நாளிதழை மாற்றினார்,நடேச ஐயர் 1952ம் ஆண்டுவரை சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராக கடமைஏற்று விலகும் போது மட்டக்களப்பை சேர்ந்த எஷ். டீ.சிவநாயகம் 1952 தொடக்கம் 1961 வரையும் சுதந்திரன் ஆசிரியராகவும் கோவை மகேசன் இணை ஆசிரியராகவும் கடமை புரிந்தனர்.

அப்போது 1958ம் ஆண்டு எதிர்ப்பு போராட்டம் அதன்பின் ஏற்பட்ட இனவன்முறையால் சுதந்திரன் பத்திரிகையை இலங்கை அரசு சிறிதுகாலம் தடைசெய்து வைத்தது 1962ல் எஷ்.ரி.சிவநாதன் சுதந்திரன் பத்திரிகையில் இருந்து விலகி தினபதி பத்திரிகை ஆசிரியராக விலகியதால் அந்த வெற்றிடத்துக்கு சுதந்திரன் ஆசிரியராக கோவைமகேசனும் இணை ஆசிரியராக மட்டக்களப்பை சேர்ந்த இரா.பத்மநாதனும் கடமைபுரிந்தனர்.

இந்தவேறையில் 1977,ல் ஏற்பட்ட இனவன்முறையால் கொழும்பு பண்டாரநாயக்காமாவத்தையில் இயங்கிய சுதந்திரன் அச்சகம் சுதந்திரன் பத்திரிகை அலுவலகம் யாழ்பாணம் பிரதானவீதிக்கு மாற்றப்பட்டு வாரம் இருபத்திருகைகள் பிரதி புதன்கிழமையும் சனிக்கிழமையும் வெளிவந்தன ஆணால் 1983 யூண் 2ம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக சுதந்திரன் பத்திரிகை முற்று முழுதாக வெளிவரவில்லை அதன்பின் 2001ம் ஆண்டு அக்டோபர் 1ம் திகதி “ஈழசுதந்திரன்” என்ற மாதாந்த பத்திரிகையை அருணாசலம் கோபாலன் என்பவர் ஆரம்பித்திருந்தார் அந்தபத்திரிகையும் ஓரிரு மாதங்களால் காணமல்போனது என்பதே வரலாறு.

தற்போது இலங்கைதமிழரசுக்கட்சிக்கு உத்தியோகபூர்வமான பத்திரிகை இன்று “புதியசுதந்திரன்” என்ற பெயரில் வெளியிடப்படுவது காலத்தின்தேவையாகவுள்ளது ஆனால் கடந்த 2012ம் ஆண்டு மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கைதமிழரசுக்கட்சியின் 12,வது தேசிய மாநாட்டில் இலங்கைதமிழரசுக்கட்சிக்கான உத்தியோகபூர்வ பத்திரிகை வெளியிடவேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டபோதும் பல்வேறு நிதிநிலமை புறகாரணங்களால் உடனடியாக பத்திரிகை வெளியிடமுடியாமல் போனது தற்போது அந்த தீர்மானம் ஆறு வருடங்களுக்குப்பின்பு நிறைவேறியுள்ளது.

ஊடகவளர்ச்சிப்போக்கு சமூகவலைத்தளங்களின் தாக்கம் இவ்வாறான பூகோளமயமாக்கல் வாழ்வில் பழமைவாய்ந்த இலங்கைதமிழரசுக்கட்சிக்கான உத்தியோக பூர்வ வாராந்தப்பத்திரிகையாக புதியசுதந்திரன் இன்று வடகிழக்கு அனைத்து மாவட்டங்களிலும் வெளியிடப்படுகிறது.

ஒருபத்திரிகையின் வளர்சிக்கு ஆசிரியர் பீடம்,களத்தில் நின்று செயலாற்றும் ஊடகவியலாளர்கள், விற்பனைபிரதிநிதிகள், கணனி இயக்குநர்கள்,வடிவமைப்பாளர்கள், அச்சக இயக்குனர்கள், என்பவர்களின் கூட்டுப்பொறுப்பு மிகவும் அவசியமாகும் அதில் ஒரு அரசியல் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகை என்பது கட்சியின் குரலாகவே சமூகம் பார்கப்போகின்றது இதில் பத்திரிகை ஆசிரியர் பொறுப்புக்கூறும் தகமை அவரிடமே உள்ளது.

எமது அரசியல் தமிழ்தேசியம் சார்ந்த அரசியல் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து செயல்படவேண்டும் புரிந்து விமர்சனங்களை முன்வைக்கவேண்டும் சாதாரண தேசிய பிராந்திய மாவட்ட மாகாண பத்திரிகையாக ஒரு அரசியல் கட்சியின் பத்திரிகை இருக்கமுடியாது அன்றய தந்தைசெல்வா காலத்து சுதந்திரன் பத்திரிகை வெளிவந்த காலத்தில் சமூகவலைத்தளங்களோ இணையத்தள செய்திதாக்கமோ இருக்கவில்லை வெறும் அச்சக ஊடகமாக பத்திரிகைமட்டுமே மக்களிடம் கருத்துக்களை முன்வைத்தன இதை பொறுப்புணர்வுடன் மக்கள் உள்வாங்கினர் ஆனால் இன்று வெளியிடப்பட்ட”புதியசுதந்திரன்” சம்மந்தன் ஐயாவின் காலம் சமூகவலைத்தளங்கள் இணையத்தளங்கள் முகநூல் எனமக்களை ஆக்கிரமித்துள்ள காலம் இந்தக்காலத்தில் ஒரு பழைமையான உரிமை அரசியலை தமிழ்தேசிய கொள்கையுடன் பரிணமிக்கும் இலங்கைதமிழரசுக்கட்சி பத்திரிகை ஒன்றை வெளியிடுவதும் அதனை தொடர்ந்து தக்கவைக்கவும் எமது வடகிழக்கு தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

வாசிப்பதுமட்டுமன்றி நல்ல ஆரோக்கியமான ஆக்கங்களையும் மற்றவர்களை வசைபாடாத தமிழில் எழுதி அனுப்பவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஊடகநண்பர்கள் தார்மீகப்பொறுப்புடன் இந்த பத்திரிகைக்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குமாறும் உரிமையுடன் வேண்டுகின்றோம் எனவும் பா.அரியநேத்திரன் கூறினார்.No comments