முதற்கட்டமாக 8000 ஆயிரம் பட்டதாரிகள் அரச சேவையில்...



 தேசிய கொள்கைகள் மற்றும்  பொருளாதார அமைச்சுக்கு முன்னால் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்  கடந்த புதன்கிழமை  (14.03.2018)  தொழில் வேண்டிய போராட்டத்தினை நடாத்தியிருந்தனர். இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கான விண்ணப்பம் கோரப்பட்டு 6 மாதங்கள் கடந்தும் இது தொடர்பில் அரசின் நிலைப்பாடு குறித்தும் பட்டதாரிகளின் வயதெல்லை 35+ தொடர்பாகவும்  தமது போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

 பின்னர் இது தொடர்பில் அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒரு மாத காலத்திற்குள் முதற்கட்டமாக 8000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான கடிதங்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் 35+ இணைத்துக்கொள்வதினை ஏற்றுக்கொண்டதுடன் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்