சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவனும் விஞ்ஞானியுமான திருமாவளவனை கௌரவிக்கும் நிகழ்வு


 (லியோன்)

மட்டக்களப்பு கல்லடி- உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவனும் ,சிங்கபூர் தேசிய பல்கலைக்கழக பேராசியரும் , விஞ்ஞானியுமான ஆறுமுகம் திருமாவளவனை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி- உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தில் அதிபர் திருமதி .திலகவதி ஹரிதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது
.

மட்டக்களப்பு மாவட்டத்தின் திருப்பளுகாமம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் திருமாவளன் தனது ஆரம்ப கல்வியை திருப்பளுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பு கல்லடி- உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையில் உயர்தரத்துடன் நிறைவு செய்துள்ளார் .

தனது மேல் படிப்புக்காக அவுஸ்ரேலியாவுக்கு  சென்று தனது உயர் கல்வியை தொடர்ந்த அங்கு பல ஆராச்சிகளை  மேற்கொண்டு சுமார் 130 மேலான கண்டு பிடிப்புக்களை கண்டுபிடித்த திருமாவளவன் ,அமெரிக்கா  ,ஒஸ்ரேலியா  ,சிங்கபூர் ஆகிய நாடுகளை பல ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானியான சிங்கபூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக விரிவுரைகளை மேற்கொண்டு வரும் இவர் தற்போது பாரிசவாத நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார் .

இவ்வாறு  பல கண்டுபிடிப்புகளையும் பல ஆய்வுகளையும்  மேற்கொண்டு இலங்கைக்கும் ,மட்டக்களப்பு மாவட்டத்திற்கும்  மற்றும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலைக்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானியும் , சிங்கபூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியாருமான திருமாவளவனை  மட்டக்களப்பு கல்லடி- உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலய அதிபர் ,ஆசிரியர்கள் ,மாணவர்களினால் கௌரவிக்கப்பட்டார்

இந்நிகழ்வு இன்று மட்டக்களப்பு கல்லடி- உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.