முத்தமிழ் விழாவும் ,தேனகம் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும்

 (லியோன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை நடாத்தும் முத்தமிழ் விழாவும், “தேனகம்”  சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின்தலைவருமான  கே .குணநாதன்   தலைமையில் இன்று பிற்பகல்  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது . 



இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் ,சிறப்பு அதிதியாக மாநகர சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் ,கௌரவ அதிதிகளாக பேராசிரியர்களும் , கலைஞர்களும் கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில் உரையாற்றிய மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் கலாசார பேரவையின் தலைவருமான  கே .குணநாதன்   தெரிவிக்கையில் கலாசார நிகழ்வுளையும் விழாக்களையும் நடத்துவதற்கு பல்வேறு தேவைப்பாடுகள் இருக்கின்றது .

எங்களுடைய பாரம்பரிய கலைகள் ,பண்பாடுகள் , கலாசார விளும்பியங்கள் என்பன  இப்போது கேள்விக்குறியாக இருக்கின்ற வேளையிலே இந்த பிரதேச செயலகங்கள் அவற்றை மீட்டெடுத்து இளம் சந்ததியினருக்கு கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது .

தற்போது வேகமாக வளர்ந்து வரும் சமூக வலையமிப்பில் நுழைந்து தங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள் . இப்போது எம்மிடம் இல்லாது போன  கலை கலாசாரம்  யார் தேடுவது என்ற கேள்வி எழுகின்ற போதுதான் மண்முனை வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை இந்த முத்தமிழ் கலாசார விழாவையும்  தேனகம் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வையும் நடத்துகின்றது என தெரிவித்தார் .

நடைபெற்ற கலாசார பேரவை நிகழ்வில் மூத்த கலைஞர்களும் கௌரவிக்கப்படுவதோடு , கலாசார பேரவையினால் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கலாசார இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கும் கலாசார பேரவையினால் நடத்தப்பட்ட அதிஷ்ட இலாப சீட்டிழுப்பு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் பரிசில்களும் வழங்கப்பட்டது 

இந்நிகழ்வில் பேராசிரியர்கள்  , கலைஞர்கள் ,எழுத்தாளர்கள் மற்றும்  மண்முனை வடக்கு பிரதேச கலாசார பேரவையின் அங்கத்தவர்கள் , மண்முன வடக்கு பிரதேச செயலக கலாசார  அலுவலக உத்தியோகத்தர்கள் ,  பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டதுடன் மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது .