மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் ‘புதியசுதந்திரன்’ பத்திரிகை வெளியீடு

இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான சுதந்திரன் பத்திரிகை ‘புதிய சுதந்திரன்’ என்னும் தலைப்புடன் மீண்டும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டிருந்த சுதந்திரன் பத்திரிகை 35வருடங்களுக்கு பின்னர் புதிய சுதந்திரன் என்னும் தலைப்புடன் வெளிவந்துள்ளது.

இதன் வெளியீட்டின் கிழக்கு மாகாண பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பத்திரிகை அறிமுகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் நடாத்தினார்.

பத்திரிகை வெளியீட்டினை இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா முதல் பத்திரிகையினை வழங்கி ஆரம்பித்துவைத்தார்.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மா.நடராஜா, கலையரசன்,இராஜேஸ்வரன்,கிழக்கு மாகாண முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட மததலைவர்கள்,கட்சி முக்கிஸ்தர்கள்,ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.