உள்ளூராட்சி போனஸ் ஆசனத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான சபையில் அவர்களுக்கான அதிகாரம் இதுதான்

LOCAL AUTHORITIES ELECTIONS (AMENDMENT) ACT, No. 16 OF 2017
இந்தச் சட்டத்தின் பிரிவு 25-26ஜ முன்னைய பிரிவு 65யுடன் சேர்த்து வாசிக்கும் போது நியமிக்கப்பட உள்ள போனஸ் பொம்மை என்பது புலனாகும்.

எதுவித அதிகாரமும் பொறுப்புக்களும் அற்ற கௌரவப் பதவியாகும்.தெளிவாகக் கூறுவதானால் சபை நடவடிக்கையை சபை உறுப்பினர்களுடன் இருந்து அவதானிக்கும் அனுமதிக்கப்பட்ட பொதுமகன்(Authorised public)
ஆகவே இந்தப் பதவிகளுக்காக சண்டையும் வில்டாப்பும் கொடுப்பது அர்த்தமற்றது.இலங்கையில் 1 ஆசனத்தை மட்டுமே வெற்றிகொண்ட ஒருகட்சி 19 போனஸ் பொம்மைகளைப் பெற்றுள்ளது.
ஆசனங்களை வெற்றிபெறாத கட்சிகள் கூட போனஸ்மூலம் அதிகாரத்தில் பங்குகேட்பது இதிலுள்ள குறைபாடாக விமர்சிக்கப்படுகிறது.
இருந்தும் தற்போது நாட்டின் பலசபைகளில் கட்சிகள் ஆட்சி அமைப்பதிலும்,தவிசாளர்களைத் தெரிவதிலும் இந்த போனஸ் சிக்கலை உருவாக்கியுள்ளது.கட்சிகள் அதிக ஆசனங்களைப் பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் இழுபறிநிலை உருவாகியுள்ளது.சிலசபைகளில் இந்த போனஸ் ஆசனத்துக்கு தவிசாளர் பதவிகூட கேட்கின்ற துரதிஷ்டநிலை உருவாகியுள்ளது.
இதனால் இவர்களின் அதிகாரம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இன்னும் சட்டத்திலும்/தேர்தல் ஆணையாளரிடமும் குழப்பம் உள்ளது.
உள்ளூராட்சி சபையில் போனஸ் ஆசனத்தில் உள்ள உறுப்பினர்களுக்கான சபையில் அவர்களுக்கான அதிகாரம் இதுதான்
இதுதான் போனஸ் மூலம் ஆட்சி செய்யும் போது நடக்க இருக்கும் சம்பவங்கள்.
●போனஸ் ஆசனத்தில் சபைக்கு செல்லும் வேட்பாளர் எந்தவித அதிகாரமும் அற்ற டம்மி உறுப்பினராவார்.
●அவர் வெறுமனே ஒரு சமாதான நீதவானாக (JP) இருப்பார்.
●ஒரு வட்டாரத்தில் வட்டார மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்று செல்லும் உறுப்பினர் அவ்வட்டாரத்தில் இருந்தால்.போனஸ் உருப்பினர் வென்ற உறுப்பினரின் கீழேயே கடமை புரிவார்.மேலும் போனஸ் உறுப்பினரினால் எந்தவொரு அபிவிருத்திச் செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது.
●சபையின் மாதாந்த அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகளை செயற்படுத்தும் முழு உரிமையும் வென்ற உறுப்பினருக்கே உண்டு.
●வென்ற உறுப்பினர் விரும்பி போனஸ் உறுப்பினருக்கு வழங்கினால் மாத்திரம் ஒதுக்கீடுகளைப் பெற்றுச் செயற்படுத்தலாம்.
●டம்மியாகக் காணப்படும் போனஸ் உறுப்பினர் சபையின் விஷேட அமர்வுகளில் அமர முடியாது.
●மேலும் போனஸ் உறுப்பினரானவர் வென்ற உறுப்பினர் தொடர்பாக எந்தவொரு பிரேரணைகளையும்,குற்றச்சாட்டுக்களையும் சபைக்குக் கொண்டு செல்ல முடியாது.
-முகப்பு நூல்-