அவசரமாக கூடியது இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கொழும்பில்.

 
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்  குழு அவசரமாக இன்று கூடியுள்ளது கொழும்பில். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று காலை பத்து மணி தொடக்கம் தற்போது (2018.02.24. பி.ப 05.40) வரை இந்த கூட்டம் நடைபெறுவதாக தகவல்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க் கட்சி தலைவர்
 இரா சம்மந்தன், தமிழரசு கட்சியின் வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், தமிழரசுகட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணித்தலைவர் உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள்  கலந்துகொண்டுள்ளனர்.

   எதிர்வரும் மாதத்தில்  ஜநா சபையின் மனித உரிமை ஆணையகத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் இரு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைகள் தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், இந்த தேர்தலில் கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள் மீதான ஒழுக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆராயப்படுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.